மயிலாடுதுறையிலிருந்து இன்னுமொரு வைரமாக உலக நாடுகளின் கவனத்தை தனது புற்றுநோய் பற்றிய  ஆய்வின் மூலம் தன்பக்கம் திருப்பியிருக்கும் டாக்டர்.கிருஷ்ணராஜ் ராஜலிங்கம். ஜெர்மனியின் துறைசார் இளம் அறிவியல் விஞ்ஞானிகளுக்கு வழங்கப்படும் சிறப்பு விருது பெற்றுள்ளார்!

Photo Sharing and Video Hosting at Photobucket

 மயிலாடுதுறை சித்தர்காட்டில் மருத்துவராக பணியாற்றி காலமான மலையம்பெருமாள் அவர்களின் பேரனான கிருஷ்ணராஜ் ராஜலிங்கம்,குருஞானசம்பந்தர் & ராஜ் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் பயின்று, திருச்சி பாரதிதாசன் பல்கலை உயிரியல் துறையில் பட்டம் பெற்று, தற்போது ஜெர்மனியில் பணியாற்றிக்கொண்டே,உயிரியல் துறையில், புற்றுநோய் சம்பந்தமாக, புற்றுநோய் எவ்வாறு தீவிரமடைகிறது? சாதாரணமாக பணியாற்றும் செல்கள், எவ்வாறு மிக கடுமையாக நோய் கிருமியாக வலுப்பெறுகின்றன, என்பது பற்றிய ஆய்வில் ஈடுப்பட்டுள்ளார்.

Photo Sharing and Video Hosting at Photobucket

 மயிலாடுதுறையிலிருந்து சென்று நம் நாட்டின் புகழ் பரப்பும் பணியில் ஈடுபட்டுள்ள,டாக்டர் கிருஷ்ண்ராஜ் ராஜலிங்கத்தை வாழ்த்துவோம்! 

ஜெர்மனிய இணையதளத்திற்கு  டாக்டர் கிருஷ்ணராஜ் ராஜலிங்கம் அவர்கள் வழங்கிய பேட்டியை,காண இங்கே செல்லுங்கள்!

Advertisements
Posted by: மயிலாடுதுறை | September 27, 2007

எல்லை மா(மீ)றும் மயிலாடுதுறை.!?

dn_270907_e4_16-01_try.jpg

மயிலாடுதுறை நகராட்சியின் உறுப்பினர்கள் மத்தியில் நேற்று நடைப்பெற்ற கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் மயிலாடுதுறை நகர எல்லை விரிவாக்கப்படுகிறது!

அதன்படி கீழ்கண்ட ஊராட்சிகள் மயிலாடுதுறை நகராட்சியுடன் இணைக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது! திருவிழந்தூர்,பட்டமங்கலம்,நீடூர்,வள்ளாளகரம், மயிலாடுதுறை புறநகர்,நல்லத்துக்குடி,சித்த்ர்காடு,மாப்படுகை, மன்னம்பந்தல் ஆகிய 9 ஊராட்சிகள் மயிலாடுதுறை நகராட்சியுடன் இணைக்கும் தீர்மான நிறைவேற்றப்பட்டுள்ளது.  பரப்பளவை அதிகரிப்பதன் மூலம் நகராட்சியின் வருவாய் அதிகரிக்க செய்ய முடியும்,பஸ் நிலையம் போன்ற திட்டபணிகளுக்கு உதவியாக இருக்கும் என ஏற்கனவே மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் முன்பு தெரிவித்திருந்தார். ஆனாலும் பெரும் செலவில், செயல்படுத்தப்படவுள்ள பாதாள சாக்கடை.கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் போன்ற திட்டங்கள் ஆரம்பிக்கப்படுவதற்கு, முன்பே இது போன்ற தீர்மானங்களோ முடிவுகளோ மேற்கொண்டிருந்தால், அத்திட்டங்களால் இந்த 9 ஊராட்சிகளை சேர்ந்தவர்களும் பயனடைந்திருக்ககூடும்! 9 ஊராட்சி சேர்ந்தவர் எப்படி இந்த விஷயத்தை அணுகப்போகிறார்கள் என்பதை கொஞ்சம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்!

Posted by: மயிலாடுதுறை | August 29, 2007

வருமோ மாற்றம்..?

dn_29082007_e4-16-01_try.jpg

ரொம்ப வருஷமா இப்படித்தான் பேசிக்கிட்டே இருக்காங்க? ஆனா சொல்லிக்கிற மாதிரி ஒரு மாற்றத்தையும் கொண்டுவர முடியலையே..?

Posted by: மயிலாடுதுறை | August 14, 2007

தாய்நாட்டை போற்றுவோம்…!

அறுபதாம் ஆண்டின் சுதந்திர நாளில்

அன்பை பகிர்வோம்..!

நட்பில் இணைவோம்..!

நல்லதொரு சூழலுக்கு,நம்மையும்,

நம்மை பின்பற்றி வரும்,

நம் இளைய தலைமுறைகளாயும்,

வழி நடத்திச்செல்வோம்

வாழ்க..! பாரதம்..!

ஜெய்ஹிந்த்..!!


 

Posted by: மயிலாடுதுறை | August 10, 2007

சின்னக்கடை பிள்ளையார்

Photo Sharing and Video Hosting at Photobucket

சப் ஜெயிலுக்கு முன்பக்கமாய் கையில் குச்சியோடு காந்தி, தர்கா, தாலுகா ஆபிஸ், முனிசிபல் ஆபிஸ் புடை சூழ நட்ட நடுவில் அமர்ந்திருக்கும் சின்னக்கடை பிள்ளையார் பற்றி யாருக்கும் சொல்ல வேண்டியதில்லை. இன்னும் சில வாரங்களில் கும்பாபிஷேகமாம்!
சின்னக்கடைத் தெரு பிள்ளையார் என்னுடைய நெருங்கிய நண்பர்.எனக்கு மட்டுமல்ல அக்கோயில் சுற்றியுள்ள அத்தனை பேருக்குமே!
நேஷனல் ஸ்கூலில் படித்தவர்களும் சரி,நேஷனல் ஸ்கூலில் பரீட்சை எழுதியவர்களும் சரி, இவரை மீட் பண்ணாமல் சென்றதில்லை!
கும்பாபிஷேகம் நடைபெற நன்கொடை தரும் விருப்பமுள்ளவர்கள் தயவு செய்து ஊரிலிருக்கும் தங்களின் உறவுகளோடு தொடர்பு கொண்டு.விழா சிற்ப்புடன் நடைபெற உதவுங்களேன்!

மேலும் விபரங்களில் தேவைப்படுமெனில்,மெயிலவும் – mayilaword@gmail.com

Posted by: மயிலாடுதுறை | August 4, 2007

Photo Sharing and Video Hosting at Photobucket

Posted by: மயிலாடுதுறை | July 29, 2007

பஸ் ஸடாண்ட்.!

ஊர் வந்திறங்கும் அதிகாலைகளில்,

நமக்கு மிகவும் பிடித்தமான
Photo Sharing and Video Hosting at Photobucket
நம்மூர் பஸ் ஸடாண்ட்!

Posted by: மயிலாடுதுறை | July 25, 2007

Photo Sharing and Video Hosting at Photobucket
விட்டுச்சென்ற ஊர்!
விடாத நினைவுகள்.!
பிரிந்த உறவுகள்!
பிரியாத நினைவுகள்..!
உறங்கும் வேளையிலும்
உள்ளத்தில் உலா வரும் தலம்!

வாருங்கள் வளர்ந்த வாழ்க்கையை
பகிர்ந்துகொள்ள!

Posted by: மயிலாடுதுறை | July 25, 2007

Hello world!

Welcome to WordPress.com. This is your first post. Edit or delete it and start blogging!

Categories